மைக்ரோசாப்ட் 365 முடங்கியது: பயனர்கள் அவதி
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மைக்ரோசாப்ட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.;
வாஷிங்டன்,
உலகின் முன்னணி டெக் நிறுவனமாக விளங்குகிறது பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் 365 என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களின் ஒரு தொகுப்பாகும். இந்த செயலி இன்று உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயனர்கள் அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட்டின் கிரவுட்ஸ்டிரைக் சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டது.
உலகம் முழுவதும் பல மணி நேரம் கணிணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மைக்ரோசாப்ட்டில் மீண்டும் அதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் அவுட்லுக், வேர்ட், எக்செல் மற்றும் டீம்ஸ் போன்ற டூல்களை நம்பியிருக்கும் வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயனர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டுள்ளது.