இந்த நாடுகளில் எல்லாம் தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும்..! லிஸ்ட் இதோ..!

அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-17 08:34 GMT

இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள், 4 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு அடிப்படை உரிமை இல்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர். தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு எதிராக 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், தன்பாலின திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது பெரும்பான்மையான கருத்தாக உள்ளது. மத்திய அரசும் தன்பாலின திருமண அங்கீகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்தியாவில் நிலைமை இவ்வாறு இருக்க, 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளை பார்ப்போம்.

நெதர்லாந்து: 2001

பெல்ஜியம்: 2003

கனடா: 2005

ஸ்பெயின்: 2005

தென் ஆப்பிரிக்கா: 2006

நார்வே: 2009

ஸ்வீடன்: 2009

ஐஸ்லாந்து: 2010

போர்ச்சுக்கல்: 2010

அர்ஜென்டினா: 2010

டென்மார்க்: 2012

உருகுவே: 2013

நியூசிலாந்து: 2013

பிரான்ஸ்: 2013

பிரேசில்: 2013

பிரிட்டன்: 2014

லக்சம்பர்க்: 2015

அயர்லாந்து: 2015

அமெரிக்கா: 2015

கொலம்பியா: 2016

பின்லாந்து: 2017

ஜெர்மனி: 2017

மால்டா: 2017

ஆஸ்திரேலியா: 2017

ஆஸ்திரியா: 2019

தைவான்: 2019

ஈக்வடார்: 2019

கோஸ்டாரிகா: 2020

சுவிட்சர்லாந்து: 2022

மெக்சிகோ: 2022

சிலி: 2022

ஸ்லோவேனியா: 2022

கியூபா: 2022

அண்டோரா: 2022

ஸ்காட்லாந்து: 2014

கிரீன்லாந்து: 2016

எஸ்டோனியா: 2023 (2024ம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும்).

Tags:    

மேலும் செய்திகள்