சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு

நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்.;

Update:2024-01-24 05:15 IST
சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 31 பேர் மீட்பு

யுனான்,

சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்ணில் புதையுண்ட 31 பேரின் உடல்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு 120-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்குள்ள மக்களிடையே பீதி நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்