அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு 30வது வயதில் 12 வயது சிறுமியுடன் ஏற்பட்ட நட்பு! 49 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய 30வது வயதில், 12 வயது சிறுமியுடன் ஏற்பட்ட நட்பு குறித்து மனம் திறந்தார்.

Update: 2022-09-24 14:15 GMT

Image Credit:www.foxnews.com

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன்னுடைய 30வது வயதில், 12 வயது சிறுமியுடன் ஏற்பட்ட வினோத நட்பு குறித்து மனம் திறந்தார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசிய கல்வி சங்கத்தில் ஜோ பைடன் கலந்துகொண்டு நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது. அதில் 12 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது குறித்து அவர் பேசியுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கில் பேசிய ஜோ பைடன் தனது உரையின் போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை அடையாளம் கண்டுகொண்டார்.

உடனே அவர் தனது பேச்சை சிறிதுநேரம் இடைநிறுத்தினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பின், பேச்சை தொடங்கிய அவர், அந்த பெண்ணை நோக்கி, "நீங்கள் எனக்கு ஹாய் சொல்ல வேண்டும்," என்று கூறினார்.

"நாங்கள் வெகுதூரம் பின்னோக்கி திரும்பிச் செல்கிறோம். அப்போது அந்த பெண்ணுக்கு வயது 12, எனக்கு வயது 30. ஆனால் எப்படியிருந்தாலும், இந்த பெண் எனக்கு ஒரு மோசமான காரியத்தைச் செய்ய உதவினார்" என்று கூறினார்.

இதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர்.

ஆனால் தான் எதை பற்றி பேசுகிறோம் என்பதை, அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை பைடன் கூறவில்லை.அவருக்கு மனநோய் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பைடன் தனது வினோதமான கருத்துகளினால் நம்மில் பாதி பேரை அவர் திகைக்க வைக்கிறார் அல்லது நம்மில் பாதி பேரை முழுவதுமாக புரிந்துகொள்வதை கடினமாக்கி விடுகிறார் என்று பலரும் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்