அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவம்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பிரபல பாடகி அச்சம்

அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவம் எதிரொலியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பிரபல பாடகி அச்சம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-26 23:42 GMT

கோப்புப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டிருப்பது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், "இதயம் உடைந்து போனது. இந்த அழகான குழந்தைகளுக்கும், ஆசிரியைகளுக்கும் நேர்ந்ததைத் கேட்டதிலிருந்து நான் மிகவும் உணர்ச்சிவயமாகி அழுது கொண்டிருந்தேன். நாடு முழுவதும் நடைபெறுகிற இத்தகைய வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பலருடன் நானும் இணைந்து நானும் கோருகிறேன். நான் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன். நமது குழந்தைகளையும், நமக்கு அன்பானவர்களையும் எண்ணி பயப்படுகிறேன். பள்ளிக்கு தினமும் குழந்தைகளை அனுப்புவதற்கு நம் அனைவருக்கும் பயமாக இருக்கிறது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்த செயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் என் இதயம் வலிக்கிறது" என கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்