அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்ட விமானப்படை வீரர் கைது

ஜாக் டெய்க்ஸேய்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அவரை, மாசாச்சுசெட்ஸில் அவரது வீட்டிலிருந்து எப்பிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

Update: 2023-04-15 07:09 GMT

வாஷிங்டன்

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள் மார்ச் மாதத்தின் துவக்கத்திலிருந்து இணையத்தில் கசிய ஆரம்பித்தன. உக்ரைன் போரைப்பற்றிய அமெரிக்காவின் கண்காணிப்புகள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் குறித்த முக்கியமான ரகசியங்கள் இவ்வாவணங்களில் இருந்தன.

இப்போது, அந்த ஆவணங்கள் கசிந்தது தொடர்பாக அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல்படையைச் சேர்ந்த 21 வயதான் வீரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரகசிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க விமானப்படை அதிகாரி பாஸ்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஜாக் டெய்க்ஸேய்ரா என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அவரை, மாசாச்சுசெட்ஸில் அவரது வீட்டிலிருந்து எப்பிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

அமரிக்க அரசையும் அதன் ராஜாங்க உறவுகளையும் சங்டகப்படுத்தியதாகக் கருதப்படும் இந்த இளைஞர் மாசாச்சுசெட்ஸில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல் படையின் புலனாய்வுப் பிரிவில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார். இவ்வலுவலகம் செல்ஃபோன் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு இடம்.

இவர்சைபர் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்ஸ் என்ற இளையவர்களுக்கான ஒரு பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். அமெரிக்க விமானப்படையின் இணையதளம், இப்பணியிலிருப்பவர்கள் அமெரிக்க விமானப்படையின் உலகளாவிய தகவல் தொலைதொடர்பு இணைப்புகளை செயல்படுத்துவர் என்று கூறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்