இஸ்ரேல்; போதை பொருள் கடத்தல் தலைவர்கள் 26 பேர் கைது

இஸ்ரேலில் போதை பொருட்களை கடத்தி, வினியோகம் செய்பவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுடன் ஒருவராக போலீசாரின் ஆட்கள் செயல்பட்டனர்.

Update: 2024-05-07 22:29 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் தெற்கே செங்கடலையொட்டிய வடக்கு கரையோரத்தில் அமைந்த நகரம் இலாத். இந்த நகரில் போதை பொருள் கடத்தல் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் சென்றது. இதனை தொடர்ந்து நடந்த அதிரடி நடவடிக்கையின் தொடர்ச்சியாக, போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி இஸ்ரேல் போலீசார் கூறும்போது, 10 மாதங்களாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன்படி, ஆபத்துக்குரிய போதை பொருட்களை கடத்தி, வினியோகம் செய்பவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளுடன் ஒருவராக எங்களுடைய ஆட்கள் செயல்பட்டனர்.

நகரத்தில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற பணியில் அவர்கள் ஈடுபட்டனர். இதில், கொக்கைன், கெட்டமைன் மற்றும் தோசா உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத போதை பொருட்கள் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு வகைகளில் ஏஜெண்டுகளால் வாங்கப்பட்டன.

இதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. நீண்டகால மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைகளால் அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த போராட்டம் தொடரும் என்று இலாத் பகுதியின் மண்டல தளபதியான துணை சூப்பிரெண்டு எலியாகு ஷ்மோல் கூறியுள்ளார். எனினும், கைது செய்யப்பட்டவர்கள் யாரென்ற விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்