அமெரிக்க அரசு நடத்திய 'கட்டுமான சவால்' போட்டி: மும்பை ஐ.ஐ.டி. மாணவர் குழுவுக்கு 2-வது பரிசு

அமெரிக்க அரசு நடத்திய ‘கட்டுமான சவால்’ போட்டியில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் குழுவுக்கு 2-வது பரிசு கிடைத்தது.

Update: 2023-04-25 21:08 GMT

கோப்புப்படம்

வாஷிங்டன்,

அமெரிக்க எரிசக்தி துறை, 'சோலார் டெகாத்லான்' என்ற 'கட்டுமான சவால்' போட்டியை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிக திறன் கொண்ட, புதுமையான கட்டிடங்களை வடிவமைத்து கட்ட வேண்டும் என்பதுதான் மாணவர் குழுக்களுக்கு விடப்பட்ட சவால். பருவநிலை மாற்ற பிரச்சினையில் ஜனாதிபதி ஜோபைடனின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டுக்கான இந்த போட்டியில், அமெரிக்காவின் பால் மாநில பல்கலைக்கழகம் முதல் பரிசு பெற்றுள்ளது. 2 வருடங்கள் பாடுபட்டு, அவர்கள் உருவாக்கிய வீடு, இப்பரிசை பெற்றுத்தந்துள்ளது.

மும்பை ஐ.ஐ.டி.யின் மாணவர்கள் குழு, மும்பையில் கட்டிய வீட்டுக்காக 2-வது பரிசு கிடைத்துள்ளது. வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த சூழ்நிலையில், காற்றின் மாசு பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்த வீட்டை கட்டி உள்ளனர்.

அதில் தங்குபவர்கள், தாங்களாகவே வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் ஆகியவற்றை தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்