இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து
இங்கிலாந்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து சரியாக சிக்னல் கிடைக்காததால் பல விமானங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. இதன் காரணமாக இங்கிலாந்தில் 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் பல மணி நேரம் போராடி இதனை சரிசெய்தனர். எனினும் இந்த தொழில்நுட்ப கோளாறால் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களின் கால அட்டவணை நாள் முழுவதும் மாற்றப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.