'ஹாங்காங், இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை' - புதிய பாட புத்தகங்களால் சர்ச்சை
புதிய பாட புத்தகங்களில், ஹாங்காங் ஒருபோதும் இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.
ஹாங்காங்,
ஹாங்காங், இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாக திகழ்ந்தது. 1881-ம் ஆண்டு தொடங்கி 1941 வரையிலும், பின்னர் 1945 முதல் 1997 வரையிலும் இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியின்கீழ்தான் ஹாங்காங் இருந்தது. 1997-ம் ஆண்டுதான் இது சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில், கடுமையான சட்ட திட்டங்களுடன் ஹாங்காங் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதன் மக்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் ஹாங்காங்கில் புதிய பாட புத்தகங்களில், ஹாங்காங் ஒருபோதும் இங்கிலாந்தின் காலனியாக இருந்தது இல்லை என்ற கருத்து வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.