மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!

ரஷிய அதிபர் புதினின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் படத்தைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர்.

Update: 2022-06-27 09:01 GMT

பெர்லின்,

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தது. உக்ரைன்-ரஷியா போர் முக்கிய இடம் பிடித்தது. 7 நாடுகளின் தலைவர்களும் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.

இந்த மாநாட்டுக்கு முன் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் படத்தைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர்.

ரஷிய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை பார்த்த பின், ஜி7 உச்சிமாநாட்டின் முதல் நாளில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி செய்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற தலைவர்களை நோக்கி, "நாம் அனைவரும் புதினை விட உறுதியானவர்கள் என்பதை காட்ட வேண்டும். அதற்காக நம்முடைய ஜாக்கெட்டுகளை அவிழ்க்க வேண்டுமா..?" என்று கேலியாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்