ஆர்மேனியா ராணுவ என்ஜினீயரிங் நிறுவனத்தில் தீ - 15 படை வீரர்கள் உயிரிழப்பு
படுகாயம் அடைந்த 3 வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.;
யெரெவன்,
ஆர்மேனியாவில் அஸாட் என்ற இடத்தில் உள்ள ராணுவ என்ஜினீயரிங் தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ மின்னல் வேகத்தில் பரவியது. இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி பலியாகினர்.
மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.