என்னதான் டிரம்ப் மீது வெறுப்பு இருந்தாலும் இப்படியா..? ஹேக்கர்கள் பரப்பிய அதிர்ச்சி தகவல்

டான் டிரம்பின் எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர்.;

Update:2023-09-21 17:12 IST

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அவரது மகன் டான் டிரம்பின் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பதிவில், டொனால்டு டிரம்ப் இறந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

"எனது தந்தை டொனால்ட் டிரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2024ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்" என அவரது மகன் கூறுவதுபோல வேதனையுடன் அந்த தகவல் இருந்ததால் பலர் நம்பிவிட்டனர்.

இந்த தகவலை பார்த்த டொனால்டு டிரம்ப், அது போலி செய்தி என குறிப்பிட்டார். டான் டிரம்பின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக டிரம்பின் செய்தி தொடர்பாளரும் தெரிவித்தார்.

எனினும் டொனால்டு டிரம்ப் இறந்துவிட்டதாக வெளியான இந்த போலி செய்தி வேகமாக பரவி வைரலானது. சிறிது நேரத்தில் அந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன.

Tags:    

மேலும் செய்திகள்