பாகிஸ்தான் சிறையில் இம்ரான்கான் மனைவிக்கு விஷம் வைக்கப்பட்டதா? மருத்துவ பரிசோதனையில் தகவல்

சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிவை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.

Update: 2024-04-05 23:45 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப் பெற்று, லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே போல் இம்ரான்கானின் 3-வது மனைவியான புஷ்ரா பீபி 2 வழக்குகளில் தண்டனை பெற்று அடியாலா கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஊழல் வழக்கு விசாரணையின் போது சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிவை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.

அதேபோல் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் புஷ்ரா பீபியும் தெரிவித்தார்.சிறையில் தனது மனைவி புஷ்ரா பீபிவை விஷம் வைத்து கொல்ல சதி நடந்ததாக இம்ரான்கான் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இம்ரான்கான் விடுத்த கோரிக்கையின் பேரின் புஷ்ரா பீபியின் தனிப்பட்ட டாக்டர் அவருக்கு மருத்து பரிசோதனை மேற்கொள்ள கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி புஷ்ரா பீபியின் தனிப்பட்ட டாக்டர் அசிம் யூசுப் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "இந்த நேரத்தில், புஷ்ரா பீபிக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்