பெல்சின்வேனியா: சாக்லேட் தொழிற்சாலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

அமெரிக்காவின் பெல்சின்வேனியாவில் சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.;

Update:2023-03-28 02:58 IST

கோப்புப்படம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கடந்த 24ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் 9 பேர் மாயமாகினர். மாயமான 9 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் மாயமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பெல்சின்வேனியாவில் சாக்லேட் தொழிற்சாலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்