செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்..? - ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் உள்ள 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறையை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்துள்ளது.;

Update:2022-07-01 17:32 IST
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்..? - ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்

கலிபோர்னியா,

கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நாசாவால் செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி ரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவர் 10 ஆண்டுகளாக தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணியை செய்து வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியும் இந்த ரோவர் செய்து வருகிறது. இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் ஏரியாக இருந்த பகுதியில் உள்ள 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு, அதில் இருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவர் சேகரித்தது.

கியூரியாசிட்டியின் உள்ளே அமைக்கப்பட்ட சிறிய ஆய்வகத்தில் பாறை துகள்கள் அதிக வெப்பத்தில் சூடாக்கப்பட்டு, அதன் அணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் உள்ள ஆர்கானிக் கார்பனின் அளவு துல்லியமாக அளவிடப்பட்டது.

உயிரினங்கள் உருவாக ஆர்கானிக் கார்பன் அடிப்படை தேவை என்பதால், அதை பற்றிய ஆய்வுகளும் தொடர்கின்றன. Creatures on Mars..? - Surprised NASA scientists 

Tags:    

மேலும் செய்திகள்