இந்திய பெருங்கடலில் மூழ்கிய சீன கப்பல் - 39 மீனவர்கள் மாயம்

மாயமானவர்களை தேடுவதற்கான பணிகளை மேற்கொள்ள மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2023-05-18 01:37 IST
இந்திய பெருங்கடலில் மூழ்கிய சீன கப்பல் - 39 மீனவர்கள் மாயம்

Image Courtesy : AFP

பீஜீங்,

சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று தென்ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் கவிழ்ந்து, மூழ்கியது.

அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், 17 இந்தோனேசிய மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

இதனிடையே மாயமானவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணிகளுக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்