கனடா: வாக்குவாதம் முற்றியதில் முதியவரை குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகள்

கனடாவில் சமூக ஊடகத்தில் ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 டீன்-ஏஜ் சிறுமிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2022-12-22 22:09 IST



டொரண்டோ,


கனடா நாட்டின் டொரண்டோவில் ரெயில் நிலையம் அருகே மக்கள் கூடும் சந்தை பகுதியில் 59 வயது முதியவர் ஒருவரை 8 டீன்-ஏஜ் சிறுமிகள் அடித்து தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்து கிடந்த அவரை காப்பாற்ற, பக்கத்தில் இருந்தவர்கள் துணை மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

எனினும், இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், படுகாயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சிறுமிகள் அவரை அடித்து, தாக்கியிருக்க கூடும் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அந்த முதியவரின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. சாட்சிகளின் அடிப்படையில் 8 டீன்-ஏஜ் சிறுமிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வருகிற 29-ந்தேதி மீண்டும் கோர்ட்டுக்கு கொண்டு வரும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்