பிரான்சில் சிறுவர்களுக்கு கத்திக்குத்து - பலர் படுகாயம்

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-06-08 09:49 GMT

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 6 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தகவல் அளித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்