கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்த பிட்காயின் விலை - முதலீட்டாளர்கள் கலக்கம்

கிரிப்டோகரன்சியின் மற்றொரு வடிவமான எதிரியமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Update: 2022-06-13 13:06 GMT

Image Courtesy : AFP 

வாஷிங்டன்,

உலகமெங்கும் கிரிப்டோகரன்சி என்று அழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து உள்ளது. இந்த நாணயத்தை கண்களால் பார்க்கவோ, கைகளால் பரிமாற்றம் செய்யவோ முடியாது. உலகளவில் இதற்கான சட்ட விதிகள் வகுக்கப்படாமல் வர்த்தகம் செய்யப்படுகிறது.

டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும் இவை பல வடிவங்களில் அறியப்படுகிறது. உலகம் அறிந்த கிரிப்டோகரன்சியாக பிட்காயின் பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் பலர் இதில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு பிட்காயின் விலை தற்போது வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.

கடந்த 4 தசாப்தத்திலும் இல்லாத அளவிற்கு அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக பிட்காயின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது பிட்காயினின் விலை 25 ஆயிரம் டாலருக்கு குறைவாக வர்த்தகமாகிறது.

அதே நேரத்தில் கிரிப்டோகரன்சியின் மற்றொரு வடிவமான எதிரியமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிட்காயின், எத்தேரியம் போன்றவை வீழ்ச்சியை சந்தித்து உள்ளதால் அதில் முதலீடு செய்தவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்