இது டம்மி தேர்தல்.. புதிதாக தேர்தல் நடத்தவேண்டும்: வங்காளதேச பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தல்

தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-08 11:31 GMT

டாக்கா:

வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஆனால், ஜதியா கட்சி, வங்காளதேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன.

தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தேர்தலை புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி, இந்த தேர்தலை டம்மி தேர்தல் என்றும், அதனை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும், புதிதாக தேர்தலை நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, நாளையும் நாளை மறுதினமும் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்