பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!

பிலிப்பைன்ஸில் 2 வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-12-03 23:55 GMT

மிண்டானாவ், 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் நகரில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது மிண்டானாவ் நகரில் பூமிக்கு அடியில் 82 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. தற்போது வரை இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதை போலவே கடந்த 2-ம் தேதி அன்றும் பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமும் பிலிப்பைன்சின் மிண்டானாவ் நகர் அருகே ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்