முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை அயர்லாந்து கடற்கரையில் கண்டெடுத்த சிறுவன்!

சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த ராணுவ அதிகாரி அது முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட “மில்ஸ் வெடிகுண்டு” என்பதை உறுதிப்படுத்தினார்.

Update: 2022-05-30 15:09 GMT

லண்டன்,

அயர்லாந்து நாட்டின் வடக்கு கடற்கரையில் முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட "வெடிக்கும் திறன் கொண்ட" ஒரு கையெறி வெடிகுண்டை சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான். அதை கடற்கரையில் கண்டதும், அந்த சிறுவன் வட அயர்லாந்தின் போலீசாரை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகவலை தெரிவித்தான்.

உடனே சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த ராணுவ தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், அது முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட "மில்ஸ் வெடிகுண்டு" என்பதை உறுதிப்படுத்தினார். இது வெடிக்கும் திறன் கொண்ட உயிருள்ள வெடிகுண்டு என்பதையும் அவர் தெரிவித்தார். அதன்பின், அந்த குண்டு ஆளில்லாத இடத்தில் வைத்து செயலிழக்கப்பட்டது.

மில்ஸ் வெடிகுண்டு என்பது பிரிட்டனில் பெரிய அளவில் வெளியிடப்பட்ட முதல் கையெறி குண்டு ஆகும். இது 1915 இல் உருவாக்கப்பட்டது.

இது அரிதானது என்றாலும், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்டு, இன்னும் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், இன்னும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்