ஆஸ்திரேலியாவில் சுறா கடித்துக்குதறியதில் சிறுமி பலி..!

சற்றும் எதிர்பாராத விதமாக சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுந்து சென்றது.;

Update:2023-02-06 06:13 IST

கோப்புப்படம் 

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் தலைநகர் பெர்த்தில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் டால்பின்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் இங்கு ஜெட் ஸ்கை என்று அழைக்கப்படும் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமாகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெர்த் நகரை சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் ஜெட் ஸ்கை சவாரியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆற்றில் கூட்டமாக டால்பின்களை பார்த்த உற்சாகத்தில் அந்த சிறுமி ஆற்றுக்குள் குதித்தார். பின்னர் அந்த டால்பின்களுக்கு அருகில் சென்று நீந்த முயற்சித்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுந்து சென்றது. இதை கண்டு அதிர்ந்துபோன சிறுமியின் நண்பர்கள் சுறாவிடம் இருந்து சிறுமியை மீட்க போராடினர். ஆனால் சுறா விடாமல் அந்த சிறுமியை கொடூரமாக கடித்துக்குதறியது.

இறுதியாக சுறா சிறுமியை விடுவித்துவிட்டு தண்ணீருக்குள் சென்றது. அதன் பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்