பிலிப்பைன்சில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மினிபஸ் - 8 பேர் பரிதாப பலி

பிலிப்பைன்சில் மினிபஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் சிக்கி 8 பேர் பரிதாப பலியாகினர்.

Update: 2022-12-11 18:49 GMT

பிலிப்பைன்சில் மினிபஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தில் சிக்கி 8 பேர் பரிதாப பலியாகினர்.மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் ரிசால் மாகாணம் டனாய் நகரில் இருந்து அங்குள்ள ஒரு கிராமத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினிபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மினி பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.

இந்த மினிபஸ் அங்குள்ள ஒரு ஆற்றை கடந்து சென்று கொண்டிருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மினிபஸ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஆற்றின் நடுவே சிக்கியது.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஆற்றின் நடுவே சிக்கிய மினிபஸ்சில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

எனினும் அதற்குள் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 17 பயணிகளும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்