தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.;

Update:2023-09-18 20:50 IST

தைபே,

கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு பகுதி தைவான். ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இன்று அங்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தைவானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 171 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்