கம்போடியாவில் புத்தாண்டு விடுமுறை: 4 நாட்களில் சாலை விபத்துகளில் 37 பேர் உயிரிழப்பு

கம்போடியாவின் முக்கிய நகரங்களில் 64 விபத்து சம்பவங்கள் பதிவான நிலையில் விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-17 22:04 GMT

கோப்புப்படம் 

புனோம் பென்,

கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் கடந்த 13 முதல் 16-ந்தேதி வரை 4 நாட்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று புத்தாண்டு விடுமுறையை கொண்டாட பெரும்பான்மையான பொதுமக்கள் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்தனர்.

இதன் காரணமாக அங்குள்ள நெடுஞ்சாலைகள் உள்பட முக்கிய நகரங்கள் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் புத்தாண்டு விடுமுறையையொட்டி சாலைகளில் பயணம் செய்த பலர் விபத்துகளில் சிக்கி உள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் 64 விபத்து சம்பவங்கள் பதிவான நிலையில் விபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

அதிவேக பயணம், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆபத்தான பயணம், மதுபோதையில் வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்துகள் நேர்ந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 88 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ரூ.4 ஆயிரம் கோடி பொருட்கள் நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்