அமெரிக்காவில் பயங்கர புயல் வீசியதால் 30 வீடுகள் சேதம்; 3 பேர் பலி

இந்த பயங்கர புயலால் அங்கு சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன.;

Update: 2023-06-16 18:48 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பெரிடன் நகரில் புயல் காற்று வீசியது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்தடை செய்யப்பட்டது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தது. மேலும் இந்த பயங்கர புயலால் அங்கு சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன.

இதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்