அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப், ஜோ பிடன் வெற்றி பெற்ற மாகாணங்கள் குறித்த தற்போதைய விபரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பிடன் வெற்றி பெற்ற மாகாணங்கள் குறித்த தற்போதைய தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2020-11-04 10:01 IST
வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பிடன் வெற்றி பெற்ற மாகாணங்கள் குறித்த தற்போதைய விபரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் துணை அதிபர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றநிலையில் தற்போது ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்படி 

அதிபர் டிரம்ப்: உத்தா, ரேப்ராஸ்கா, லூசியானா, தெற்கு கரோலினா, அலபாமா, தெற்கு மற்றும் வடக்கு டகோடா, ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கன்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியாவில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜோ பிடன்: வாஷிங்டன், அரேகான், கலிபோர்னியா, நியூ மேக்சிகோ, நியூ ஹேம்ஷேர், நியூயார்க், கொலொரடோ, கன்னிக்டிகட், நியூயார்க், நியூஜெர்ஸி, மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்