இஸ்ரேலில் நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேர் சிறைப்பிடிப்பு..!

இஸ்ரேலில் நேபாளத்தைச் சேர்ந்த 17 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-10-07 12:32 GMT

Image Courtesy : AFP

ஜெருசலேம்,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், 'ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்' என்ற பெயரில் இஸ்ரேல் மீது இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதையடுத்து 'ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்' என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேலில் நேபாள நாட்டைச் சேர்ந்த 17 பேர் ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் நாட்டுக்கான நேபாள தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அங்கு நடந்த தாக்குதல்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்