மேற்கு வங்காளம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி - ஆளுநருடன் இன்று சந்திப்பு

மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக அம்மாநில ஆளுநரை மம்தா பானர்ஜி இன்று மாலை சந்திக்க உள்ளார்.

Update: 2021-05-03 09:27 GMT
கோப்புப்படம்
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மிக அபாரமாக வெற்றி பெற்றது. 

200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். மேலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது டுவிட்டரில், “திங்கள்கிழமை மாலை 7 மணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என்னைச் சந்திக்க உள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்

முன்னதாக கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் தனது கட்சித் தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும் மம்தா பானர்ஜி, தான் போட்டியிட்ட தொகுதியான நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்த நிலையில் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 212 சட்டமன்ற இடங்களை வென்றுள்ளதுடன், ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்