விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-03 04:34 GMT
கோப்புப்படம்
விராலிமலை,

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளராக பழனியப்பனை விட 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் மட்டும் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்