தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.

Update: 2021-05-02 05:29 GMT
கோப்புப்படம்
கோவை, 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 11,325 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 10,952 வாக்குகளும், பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் 7,651 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்