தபால் ஓட்டு எண்ணிக்கை : எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், உதய நிதி ஸ்டாலின், கமல்ஹாசன் முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
சென்னை
234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
* தி.மு.க 62 இடங்களிலும், அ.தி.மு.க 41 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன
* திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை!
* திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை
* கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை
* சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
* சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி முன்னிலை
* கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முன்னிலை
* உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் முன்னிலை!/உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் கதிரவன் பின்னடைவு
* நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் முன்னிலை
* சென்னை அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை
* அவினாசி தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.முக.. முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.செல்லூர் ராஜீ முன்னிலை
* வேளச்சேரி தொகுதி தபால் ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது.
* சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
* குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்குகளில் அ.தி.மு.க. முன்னிலை
* தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி. தினகரன் முன்னிலை
* விருகம்பாக்கத்தில் திமுகவின் பிரபாகர் ராஜா முன்னிலை வகித்து வருகிறார்.
* கடலூரில் அதிமுகவின் எம்.சி.சம்பத் முன்னிலை வகித்து வருகிறார்.
* எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
* அரக்கோணத்தில் அதிமுகவின் சு.ரவி முன்னிலை
* ஆலங்குடியில் திமுகவின் சிவ.வி.மெய்யநாதன் முன்னிலை வகித்து வருகிறார்.
* மதுரை மேற்கில் திமுகவின் சின்னம்மாள் முன்னிலை
* விராலிமலை திமுகவின் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்து வருகிறார்.