கேரளா சட்டசபை தேர்தல்: மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவு

கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது

Update: 2021-04-06 11:10 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம், 

மேற்கு வங்காளம், அசாம் சட்டசபை தேர்தலில் தற்போது மூன்றாம் கட்டமும், கேரளாவில் இன்று ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குப்பதிவில், மொத்தம் 2.74 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். சிபிஎம் தலைமையிலான எல்டிஎப் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணிக்கும் இடையில் கடும் மோதல் நிலவுகிறது. 

கேரளாவில் 1,32,83,724 ஆண் வாக்களர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர். மொத்தம் 957 வேட்பாளர்கள் கேரளாவில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில் கேரளா சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 58.66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்