பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-05 06:33 GMT
சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 6) ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஏப்ரல் 7-ம் தேதிக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.  தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டமில்லை என்றார். 

மேலும், தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 6) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணித்து தான் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்