புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா-அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது

புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-04-03 07:24 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவைச் சேர்ந்த 2 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சுவாடி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த போது, போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

கைதான இருவரிடம் கணேஷ்நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்