விழிப்புணர்வு தபால் தலை வெளியீடு

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி விழிப்புணர்வு தபால் தலையை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்.

Update: 2021-03-31 17:17 GMT
தேனி: 

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விழிப்புணர்வு தபால் தலையை வெளியிட, போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, உதவி கலெக்டர் (பயிற்சி) தாக்ரே சுபம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்