திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-30 02:52 GMT
சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்படி நேற்று புதிதாக 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுகிறார். இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். கொரோனா உறுதியான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கணடறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்