தேர்தலில் நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பேச்சு
தேர்தலில் நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை சுமூகமாக முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டசபை தேர்தலில் களநிலவரத்திற்கும், கருத்துக்கணிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. தேர்தலில் நாங்கள் கள நிலவரத்தை நம்புகிறோம்’ என்றார்.