"பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது" - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சகோதரத்துவத்துடன் வாழும் சிறுபான்மையினரை சாதி, மத பெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
நாகை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று நாகை மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசார நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, 'திமுக யாரை எதற்காக எதிர்க்க வேண்டுமோ, அவர்களை அதற்காக எதிர்க்கிறது. சகோதரத்துவத்துடன் வாழும் சிறுபான்மையினரை சாதி, மத பெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது’ என்றார்.
#JUSTIN : திமுக யாரை எதற்காக எதிர்க்க வேண்டுமோ, அவர்களை அதற்காக எதிர்க்கிறது
— Thanthi TV (@ThanthiTV) March 27, 2021
* சகோதரத்துவத்துடன் வாழும் சிறுபான்மையினரை சாதி, மத பெயரை சொல்லி பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்துகிறது - நாகையில் கனிமொழி எம்.பி. பிரசாரம் #DMK | #KanimozhiKarunanidhipic.twitter.com/CasSomYhR4