‘அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்போம்’ செ.கு.தமிழரசன் பேட்டி
‘அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிப்போம்’ செ.கு.தமிழரசன் பேட்டி.
சென்னை,
இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், சட்டமன்ற தேர்தல் நடத்துவது அவசியமற்றது. தற்போது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல், எந்த நிபந்தனைகளுக்கும் உட்படாமல் பெரிய கூட்டங்களை சேர்த்து தேர்தல் பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனுடைய பாதிப்பு தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். எனவே தேர்தல் ஆணையம், வருகிற சட்டமன்ற தேர்தலை குறைந்தது 2 மாத காலமாவது தள்ளிவைக்க வேண்டும். ஒருவேளை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தால், மதவாத, சாதியவாத அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை இந்த தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
மேலும், இந்த கூட்டணியை எதிர்க்கும் வலிமை எந்த கட்சிக்கு இருக்கிறதோ, அந்த கட்சிக்கு இந்திய குடியரசு கட்சி இந்த தேர்தலில் ஆதரவு அளித்து, அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை தோற்கடிக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.