இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆட்டோ, கரும்பலகை சின்னம்
இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு ஆட்டோ, கரும்பலகை சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 35 தொகுதிகளில் இந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல அரூர் (தனி) தொகுதி் வேட்பாளருக்கு ‘பிரஷ்' சின்னமும், கெங்கவல்லி (தனி), சேந்தமங்கலம் (பழங்குடி), திருவிடைமருதூர் (தனி), திருவையாறு ஆகிய தொகுதி் வேட்பாளர்களுக்கு கரும்பலகை சின்னமும் தேர்தல் ஆணையம் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.