எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ காவேரி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ காவேரி, திமுகவிலிருந்து விலகி முதல்-அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.;
சேலம்
திமுக மாநில விவசாய தொழிலாளரணி இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தவர் எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ காவேரி. இவர் சேலத்திலுள்ள முதல்-அமைச்சர் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அவரோடு தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துவும் அதிமுகவில் இணைந்தார்.
காவேரி கடந்த 2006ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.