தமிழ்நாடும், ஓட்டும் விற்பனைக்கு அல்ல - கமல்ஹாசன் பேச்சு

"மக்கள் நீதி மையத்தை சேர்ந்தவர்களுக்கு அரசியல் தொழில் இல்லை" என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கூறினார்.;

Update: 2021-03-22 09:16 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழகத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னார்கள். அதனால் தான் அரசியலுக்கு வந்தேன். இந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. 

எல்லாம் வெறும் பேச்சாக இருக்கிறது. சேவை என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள் தான் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள். அவர்களுக்கு அரசியல் தொழில் இல்லை. உத்திரவாதம் நான் கொடுக்கிறேன்.

ஓட்டுக்கு ரூ.300, 500 ஏன் 5 ஆயிரம் கூட கொடுக்கிறார்கள். 5 லட்சமாக கூட மாறும். ஏப்ரல் 6ம் தேதி மக்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு. அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். எங்களுக்கான அனுமதியை முத்திரையாக குத்துங்கள். 

இல்லத்தரசிகளுக்கான மாத ஊதியம் 2 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம். அதை திமுக, அதிமுக காப்பியடித்து விட்டன. தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல. சேவை பெறும் உரிமை மக்களுக்கானது. தமிழ்நாடும், ஓட்டும் விற்பனைக்கு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்