ஆண்டு வருமானத்தை தவறுதலாக குறிப்பிட்டதால் சீமான் மீண்டும் வேட்பு மனு தாக்கல்

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 15-ந்தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-18 22:18 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த 15-ந்தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது அவரது ஆதரவாளர்கள் கவனத்துக்கு செல்லவே, சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை எனவும், எழுத்து பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால் ரூ.1,000 என்று இருந்ததை திருத்தி அவரது ஒப்புதலுடன் அவரது பெயரில் மீண்டும் ஒரு வேட்பு மனுவை அவரது வக்கீல் நேற்று தாக்கல் செய்தார்.

மேலும் செய்திகள்