‘கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி’ - கமல்ஹாசன் டுவீட்

இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2021-03-17 07:26 GMT
கோவை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

இத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறது. 

இதையடுத்து, அவர் கோவை தெற்கு தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பல்வேறு தரப்பினரிடம் தொடர்ச்சியாக உரையாடியதில் கோவையில்  தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களின் புழக்கம் அதிக அளவில்  இருப்பதை  அறிந்து கொண்டேன்.  இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே என் முதல் பணி’ என தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்