ஆண்டு வருமானம் ரூ.1,000 என பிழை: சீமான் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்

ஆண்டு வருமானம் ரூ.1,000 என பிழை: சீமான் மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Update: 2021-03-16 22:04 GMT
திருவொற்றியூர், 

வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்குகிறார். இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேவந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர் அளித்த உறுதிமொழி பத்திரத்தில் ஆண்டு வருமானமாக ரூ.1,000 மட்டுமே இருந்து வருவதாக வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்பட்டிருந்தார். இது சமூக ஊடகங்கள் உள்ளிட்டவைகளில் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியது.

இதுகுறித்து அவரது கட்சியினரின் கவனத்திற்கு கொண்டு சென்று கேட்கப்பட்ட நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை என்பதும், எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்