சட்டசபை தேர்தலில் தனித்து போட்டி 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட புதிய தமிழகம்
சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சி சார்பில் முதல் கட்டமாக 60 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டார். அதன்படி ஓட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.
சென்னை,
கோவில்பட்டி-அய்யர், விளாத்திகுளம்-செ.முத்துக்குமார், ஸ்ரீவைகுண்டம்-பா.அருண், நெல்லை-கு.செல்வமணி, நாங்குநேரி-அசோக்குமார், அம்பாசமுத்திரம்-மு.சுரேந்திரன், ஆலங்குளம்-அ.உதயகுமார், தென்காசி-ச.சந்திரன், கடையநல்லூர்-சி.பவுலிங் எலிசபத் ராணி, வாசுதேவநல்லூர்-செ.பேச்சியம்மாள், சங்கரன்கோவில்-வே.சுப்பிரமணியம், ராஜபாளையம்-தனுஷ்கோடி, ஸ்ரீவில்லிப்புத்தூர்-சாந்தி, சாத்தூர்-கோ.மாரிக்கண்ணன்.
விருதுநகர்-கு.குணம், திருச்சுழி-திருமுருகன், பரமக்குடி-ராஜீவ்காந்தி, ராமநாதபுரம் -விக்ரம் என்கிற விக்கிரமாதித்தன், முதுகுளத்தூர்-மலைச்செல்வம், திருவாடனை-செல்வம், கன்னியாகுமரி-ஆ.பூமணி, காரைக்குடி-வனிதா பாலசுப்பிரமணியன், மானாமதுரை-சி.ராஜையா, சோழவந்தான்-இந்திராணி சேதுராமன், மேலூர்-ம.பன்னீர்செல்வம்.
மதுரை கிழக்கு-சிறுதூர்.அ.பாலா என்ற பாலமுருகன், உசிலம்பட்டி- சி.திருச்செல்வம், போடிநாயக்கனூர்-பழ.நாகேந்திரன், பெரியகுளம்-மா.முருகன், ஆண்டிப்பட்டி-சு.வேல்மணி, நிலக்கோட்டை-பெ.சரவணன், பழனி-ம.பெரியதுரை, வேடசந்தூர்-ர.பிரசாந்த், திண்டுக்கல்-அ.முருகேசன், கிருஷ்ணராயபுரம்- பெ.அசோகன், குளித்தலை-ம.சிவக்குமார், துறையூர்-குணசேகரன், மணச்சநல்லூர்- ம.தினகரன்.
திருவெறும்பூர்-அ.பிச்சைமுத்து, திருச்சி மேற்கு-கோ.சண்முகம், மணப்பாறை-வக்கீல் இளையராஜா, விராலிமலை-பொ.ஆறுமுகம், அறந்தாங்கி-அமலதாஸ், திருமயம்-சிவக்குமார், திருவையாறு-உத்திராபதி, தஞ்சாவூர்-பெரியார்செல்வன், திருவாரூர்-தியாகராஜன், நன்னிலம்-சவுந்தரபாண்டியன், மன்னார்குடி-ச.சதீஷ், திருத்துறைப்பூண்டி-ஏ.கே.சுரேஷ், கீழ்வேளூர்-சோ.முத்தழகன்.
பெரம்பலூர்-பாலாஜி, நாமக்கல்-செல்வக்குமார், அந்தியூர்-த.அய்மன்னன், அவினாசி-சாமுவேல், மடத்துக்குளம்-க.மகாலிங்கம், சூலூர்-சங்கர்குரு, வால்பாறை- மா.செந்தில்முருகன், பல்லாவரம்-ர.அஜித்குமார்.