அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Update: 2021-03-15 07:07 GMT
சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது தவிர்த்து மொத்தம் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

திமுக தலைவரான முக ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை அயனாவரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அவர் இன்று தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். இதன் பின் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார்.

மேலும் செய்திகள்